×

பைக் மீது டிராக்டர் மோதல்: வாலிபர் பலி

வலங்கைமான்,பிப்.13:வலங்கைமான் அடுத்த சாலபோகம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் தினேஷ்குமார்(29). இவர்நேற்று முன்தினம் பாபநாசம் கடைவீதிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். உத்தமதான புரம் அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர்  எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமாரை பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்குமார்  முன்னதாகவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
பைக் மீது டிராக்டர் மோதல் கல்லூரி மாணவர் பலி:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு துரைக்கொண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ஹரிகரன்(21). இவர் பாபநாசம் அருகே உள்ள ரகுநாதபுரம்  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிஎம்இ படித்து வந்தார். கடந்த 9ம் தேதி கல்லூரியில் நடைபெற்ற பிடிஏ கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு தனது தந்தையை அழைப்பதற்காக நண்பரிடம் பைக்கை வாங்கி கொண்டு கல்லூரியிலிருந்து சாலியமங்கலம் சென்றார். மதகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது  அடையாளம் தெரியாத டிராக்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஹரிகரனை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்தார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.
மணல் கடத்திய லாரி பறிமுதல்:
முத்துப்பேட்டை பகுதியில் நேற்று  மணல் கடத்தி வருவதாக  போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து  எஸ்ஐ  ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கோவிலூர் பைபாஸ் சாலையில் முகாமிட்டு இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது பட்டுக்கோட்டை  சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் விசாரணை நடத்தியதில் தம்பிக்கோட்டை பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் திருடி கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மகிழங்கோட்டை தெற்குதெருவை சேர்ந்த  விஜயை (28) கைது செய்தனர்.

Tags : Tractor Showdown on Bike: The Younger Kills ,
× RELATED ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் வழங்க வேண்டும்